சன் சீ கப்பலால் சுற்றாடல் பாதிப்பு!

500 தமிழ் அகதிகளை ஏற்றிக்கொண்டு எட்டு வருடங்களுக்கு முன்னர் கனடாவைச் சென்றடைந்த எம்.வீ.சன்சீ என்ற கப்பல் தற்போது பாரிய சுற்றாடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஒன்றாக மாறியிருப்பதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. 52 மீற்றர் நீளம்கொண்ட இந்த கப்பல் 38 வருடங்கள் பழமையானது,

கனேடிய எல்லைப் பாதுகாப்பு சபையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இந்த கப்பல் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இருந்து தற்போது சுற்றாடலுக்கும், கடற்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயனங்கள் வெளியாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த எட்டு வருடங்களாக இந்த கப்பலை நிறுத்தி வைத்து பராமரிப்பதற்கு பிராந்திய அரசாங்கம் 9 லட்சத்து 70 கனேடிய டொலர்களை செலவிட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.

இந்த கப்பலை உடைப்பதற்கான ஒப்பந்தம், கப்பல் உடைக்கும் நிறுவனங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட போதும், கப்பலின் எஞ்சின்கள் உள்ளிட்ட அனைத்து பாகங்களையும் அந்த நிறுவனங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையால், இந்த திட்டம் கிடப்பில் இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!