இலங்கையில் சில வங்கிகள் வீழ்ச்சியடையும் அபாயம்! எச்சரிக்கை மணி அடித்த ரணில்

நாட்டில் சில வங்கிகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கொழும்பில் நேற்றைய தினம் வங்கியாளர்களின் விசேட மாநாடு இடம்பெற்றிருந்தது. 

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரணில் விக்ரமசிங்க குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை நாட்டில் தற்போது இளைஞர், யுவதிகள் வீதிக்கு வந்து தற்போதைய அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அரசாங்கத்திற்குள் இருக்கும் முரண்பாடான எண்ணங்களும் முடிவுகளுமே இதற்கு காரணம். 

மக்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நாம் எந்த முடிவையும் எடுத்து பயனில்லை. மக்களின் கோரிக்கைக்கு நாம் காது கொடுக்க வேண்டும்.

அது இல்லாமல் அங்கும் இங்கும் சில மாற்றங்களை செய்யப் போவோமாக இருந்தால் பிரச்சினைக்கு முடிவு கிட்டாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!