விஜயகலா குறித்து விரைவில் முக்கிய முடிவு! – நவீன் திசாநாயக்க

விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக எதிர்காலத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமரிடம் விரைவில் கையளித்த பின்னர் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

ஐதேக தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப் பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், “ அவரின் அமைச்சுப் பதவியை மட்டுமன்றி எம்.பி பதவியையும் ரத்துச் செய்ய ​ வேண்டும் எனவும் இது தனது தனிப்பட்ட கருத்து. அரசியல்வாதிகள் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும். அமிர்தலிங்கம் தொடர்பில் அன்று ஜே.ஆர்.ஜயவர்தன கடுமையான முடிவு எடுத்தார். எம்.பிகளுக்கு எல்.ரீ.ரீ. ஈயை ஊக்குவிக்க முடியாது. இது தொடர்பில் எமது கட்சித் தலைவர் உரிய முடிவு எடுப்பார்.

எமது பல தலைவர்களை புலிகள் கொன்றுகுவித்துள்ளனர். புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு ஐ.தே.க ஒருகாலமும் இடமளிக்காது. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச, எனது தந்தை காமினி திசநாயக்க உட்பட பலரை புலிகள் கொன்றுள்ளனர். புலிகளுக்கு எதிராக செயற்படும் அதேவேளை, தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இனவாதம்.மதவாதம், பிரிவினைவாதம் என்பவற்றை எமது கட்சி நிராகரிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!