நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு

அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான யோசனையில் வெற்றி பெற தேவையான பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட்டு வரும் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க இணங்கியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகரிடம் கையளிக்கும் விதம் மற்றும் கையளித்த பின்னர் ஏற்படும் நிலைமை உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி கலந்துரையாடி வருவதாகவும் கிரியெல்ல கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!