IMF உடனான நடவடிக்கைகள் சீன அரசாங்கத்தின் நிதியுதவி திட்டங்களை தாமதப்படுத்தியுள்ளதாக சீன தூதுவர் தெரிவிப்பு

இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்துடனான நடவடிக்கைள் சீன அரசாங்கத்தின் நிதியுதவி திட்டங்களை தாமதப்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியினை வழங்குவதற்கு சீனா இணங்கியுள்ள நிலையில் அதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்காக கடனுதவியை வழங்குவதற்கு முன்வந்தமையை தொடர்ந்து நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையினால் குழு வொஷிங்டனில் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தன.

இந்த பேச்சுவார்த்தை சீனாவின் நிதியுதவிக்கான திட்டத்தினை தாமதப்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் அறிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!