நம்பிக்கையில்லா பிரேரணை – கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை!

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பது குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
    
“அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி இன்னமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஒன்றுகூடி அப்பிரேரணையை ஆதரிப்பதா? இல்லையா? என்று முடிவெடுக்கும்” என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!