லண்டனில் குத்தி கொல்லப்பட்ட நால்வரின் புகைப்படம் வெளியீடு!

லண்டனில் உள்ள ஒரு வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய தலைநகர் லண்டனில், Bermondsey என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலை 1.40 மணியளவில், சுமார் 5 நிமிடங்களுக்கு பெண் ஒருவர் பயங்கரமாக அலறும் சத்தம் கேட்டுள்ளது.
    
இதனால் பீதியடைந்த, அக்கம்பக்கதவர்கள் பொலிசாருக்கு தகவலளித்ததும், சம்பவம் இடத்துக்கு பொலிசார் விரைந்தனர். 600,000 பவுண்டுகள் மதிப்புடைய அந்த வீட்டின் படுக்கையறை ஒன்றில், மூன்று பெண்களும் ஒரு ஆணும் கத்திக்குத்துக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 20 வயதுகளில் உள்ள ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரும், கொலை செய்யப்பட்ட நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதீயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கொலை செய்யப்பட்டவர்கள் டோலெட் ஹில் (பாட்டி) 64, அவரது கூட்டாளி டென்டன் பர்க், அவரது மகள் தன்ஷா டிரம்மண்ட்ஸ் மற்றும் அவரது பேத்தி சமந்தா டிரம்மண்ட்ஸ் என தெரியவந்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!