வேறொரு நாட்டுக்கு புலம்பெயரும் ஜேர்மானியர்கள்: அதிரவைக்கும் காரணம்!

பல நாடுகளிலிருந்து மக்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வரும் நிலையில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஜேர்மானியர்கள், பராகுவே நாட்டுக்கு புலம்பெயர்ந்து வருகிறார்கள். அதற்காக அவர்கள் குறிப்பிடும் காரணம், ஜேர்மனியில் பெருமளவில் கட்டுப்பாடுகள் உள்ளன என்பது. குறிப்பாக, கொரோனா கட்டுப்பாடுகள்…
    
தடுப்பூசிகளையும் பொதுமுடக்கத்தையும் தாங்கள் விரும்பவில்லை, அதனால் தாங்கள் ஜேர்மனியிலிருந்து வந்துவிட்டதாக சிலர் கூறினாலும், ஜேர்மனியை விட்டு வர முடிவு செய்ததற்காக சிலர் கூறும் மற்றொரு காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஆம், ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வந்துள்ள இஸ்லாமியர்களின் பழக்கவழக்கங்களை சகித்துக்கொள்ள முடியாததால், ஜேர்மனியையே விட்டு வெளியேறி பராகுவா நாட்டுக்கு புலம்பெயர்வோரக வந்துவிட்டதாக கூறியுள்ளனர் சிலர்.

இங்கும் கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறும் உள்ளூர் மேயர்களில் ஒருவரான Enrique Hahn என்பவர், ஜேர்மனியிலிருந்து வந்துள்ளவர்கள் கவலை ஏற்படுத்தும் அளவுக்கு தவறான எண்ணங்கள் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

அவர் கூறுவது சரிதான் என்று தோன்றுகிறது, சம்பந்தப்பட்டவர்கள் பேசுவதைக் கேட்டால்…

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!