ஜனாதிபதிக்கான நிதியை குறைத்து அவரை பதவி விலக்க வேண்டும் – குமார வெல்கம கோரிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஒதுக்கப்பட்ட அனைத்து நிதியையும் குறைத்து அவரை பதவி விலகுமாறு வலியுறுத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் ஒன்றின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரச தலைவராக நீடிக்காத வரையில் அரசாங்கம் தொடர்பான எந்தவொரு விடயங்களுக்கும் தனது ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வெல்கம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்கி நாட்டையும் மக்களையும் காப்பாற்ற நாடாளுமன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படக் கூடிய 07 நடவடிக்கைகள் குறித்தும் குமார வெல்கம பரிந்துரைத்துள்ளார்.

மேலும், நம்பிக்கையில்லாப் பிரேரணை அல்லது இடைக்கால அரசாங்கம் தொடர்பான எந்தவொரு முன்மொழிவுக்கும் வாக்களிக்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவினால் தமக்கு அனுப்பப்பட்ட கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!