நாளை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணை என்பன நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற மே தின பேரணியில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
    
இதேவேளை, எதிர்வரும் வாரங்களில் அரசாங்கத்துக்கு எதிராக மேலும் பல நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை கொண்டு வரவுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!