இடைக்கால அரசாங்கம்! அடுத்த கட்ட நகர்வு அரசாங்கத்தின் கைகளில்!

குறுகிய காலத்துக்கான இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதில் பொதுஜன பெரமுனவுக்கும் அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படும் குழுவுக்கும் இடையில் கொள்கை ரீதியான இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா இதனை எமது செய்திச்சேவையிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகையில் இன்று இது தொடர்பான சந்திப்பு இடம்பெற்றதாக அவர் கூறினார்.


நடப்பு விடயங்களின் அடிப்படையில் நாட்டின் அரசியல் நெருக்கடி விரைவில் தீர்க்கப்படும் என்று நம்பிக்கை வெளியிட்ட அவர், இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்.

எனவே தற்போதைய நிலையில் அடுத்த தீர்மானமிக்க நகர்வு அரசாங்கத் தரப்பிலேயே இருப்பதாக அனுர பிரியதர்சன யாப்பா எமது செய்திச்சேவையிடம் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!