தேசிய ஒத்துழைப்பு அரசு அமைக்க இணக்கம்! – “புதிய மொந்தையில் பழைய கள்”

தேசிய ஒத்துழைப்பு அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
    
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுகின்ற சுயாதீன குழுவொன்றைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சிலர் முக்கிய கலந்துரையாடலில் நேற்று ஈடுபட்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பசில் ராஜபக்‌ஷ ஆகியோருடனேயே உத்தேச தேசிய ஒத்துழைப்பு அரசாங்கம் தொடர்பில் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றுள்ள இந்த கலந்துரையாடலின் போதே, தேசிய ஒத்துழைப்பு அரசாங்கம் தொடர்பில் கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.]

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!