கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஒருபோதும் ஆட்சி அமைக்கமாட்டோம்

குறுகிய காலப்பகுதியில் அரசாங்கத்தினை பொறுப்பேற்க கூடியவர்கள் பொறுப்பேற்க முடியும் என்பதோடு, கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் ஆட்சி பீடம் ஏறுவதனை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.

மக்களே வெறுக்கும் நடப்பு அரசாங்கத்துடன் இணைந்து எவ்வாறு மக்களாட்சி செய்வது என்பதனாலேயே தாங்கள் தனித்துவமான ஆட்சி ஒன்றுக்கு செல்வதற்கு முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கோரிக்கைகளை நிறைவேறும் எந்த தரப்பினரும் ஆட்சியை கைப்பற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நிராகரித்த ஒருவரை ஐக்கிய மக்கள் சக்தி தலைவனாக ஏற்றுக்கொண்டு வரப்பிரசாதங்களுக்காக ஆட்சி பொறுப்பினை ஏற்காது என்பதனை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!