இலங்கைக்கு உதவ சர்வதேச நாணய நிதியத்தை ஊக்குவிக்கப் போகிறதாம் சீனா!

இலங்கையின் நிலைமையை கருத்தில் கொண்டு, கூடிய விரைவில் உடன்பாட்டை எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தை ஊக்குவிப்பதில் சீனா தீவிரமான பங்களிப்பை வழங்க விரும்புவதாக இலங்கைக்கான சீன தூதுவர் சி ஷென்ஹோங் தெரிவித்துள்ளார்.
    
நிதி அமைச்சர் அலி சப்ரியுடன் கொழும்பில் உள்ள நிதியமைச்சில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்குதாரர் என்ற வகையில், உடன்பாட்டை எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தை ஊக்குவிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் இலங்கையின் முயற்சிகளுக்கு சீனா பூரண ஆதரவளிப்பதாகவும் கடனை மறுசீரமைப்பதற்கான இலங்கையின் தீர்மானத்தை சீனா ஆதரிக்கிறது என்றும் சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!