நெருக்கடிக்கு கப்ராலும் ஜெயசுந்தரவுமே காரணம்!

இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி ஜயசுந்தர ஆகியோரே பொறுப்புக்கூற வேண்டும் எனவும், பலவீனமான இவர்களை பதவிகளுக்கு நியமிக்க தீர்மானம் எடுத்தவர்களும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
    
நாடு இப்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகளை சமாளிக்க ஸ்திரமான அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும். அரசாங்கத்திற்குள் முரண்பாடுகளை வைத்துக்கொண்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

எனவேதான் இப்போதுள்ள அமைச்சரவை முழுமையாக பதவி விலக வேண்டும் எனவும் டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்கி புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் நாம் வலியுறுத்தினோம்.

டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்கி சகல கட்சிகளையும் ஒன்றிணைந்து இடைக்கால தேசிய அரசாங்கம் ஒன்றினை உருவாக்கிக்கொண்டால், தற்போதைய நெருக்கடிகளை சமாளிக்க சர்வதேச ஒத்துழைப்புக்களையும், சர்வதேச அமைப்புகளின் உதவிகளையும் பெற்றுக்கொண்டு நெருக்கடிகளில் இருந்து மீள முடியும் எனவும் அவர் கூறினார்.

அரசாங்கம் எடுத்த தீர்மானங்களில் பல தவறுகள் இடம்பெற்றுள்ளன, மத்திய வங்கியின் ஆளுநர்,ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஆகியோரின் தவறான தீர்மானங்கள் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது. எனினும் காலம் கடந்தேனும் இன்று ஒரு சில நல்ல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதை வரவேற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!