கைவிட்டது சீனா – ஜப்பானின் காலைப் பிடித்தார் ஜனாதிபதி!

இலங்கையினால் பெறப்பட்ட கடன்களை மறுசீரமைக்க சீனா மறுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.
    
நாடாளுமன்றில்இதனைத் தெரிவித்த அவர், வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரிப்பதற்கான வழிகளை கண்டுபிடிக்கத் தவறினால் நாடு மேலும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனக் கூறினார்.

மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் கடனைக் கோரி ஜப்பானிய பிரதமருக்கு ஜனாதிபதி கடிதம் எழுதியுள்ளதாகவும், அவர் சாதகமான பதிலைக் காட்டியுள்ளதாகவும் அறிந்தோம்.

அதுதான் தற்போது எமக்குள்ள ஒரே நம்பிக்கை. அந்தக் கடனைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், நாங்கள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என்று அவர் கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!