அக்கரைப்பற்றில் நேற்றிரவு பெரும் பதற்றம்- 11 பொலிசார் உட்பட 16 பேர் படுகாயம்!

அக்கரைப்பற்று பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றை அடுத்து பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை மோதலாக மாறி பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மோதலை அடுத்து இந்தப் பகுதியில் பதற்ற நிலை நீடித்து வரும் நிலையில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    
நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் அக்கரைப்பற்று பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட ஆறு பொலிஸார் மற்றும் மூன்று சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு அக்கரைப்பற்று பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதித் தடுப்பில் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் பாதுகாப்பற்ற முறையில் வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிக்ஞை செய்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் வீதியில் விழுந்து படுகாயம் அடைந்தார் என பொலிஸார் கூறுகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் வீதி மறியலில் ஈடுபட்டதுடன், அதிகாரிகளை தாக்கி பாதுகாப்பு சாகடிக்கும் தீ வைத்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் அக்கரைப்பற்று பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட 07 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் 3 சிவில் பாதுகாப்பு படையினர் காயமடைந்து சிகிச்சைக்காக அக்கரைப்பற்று மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பொத்துவில் பொலிஸ் அத்தியட்சகரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பாறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸார் 11 பேர் உட்பட 16 பேர் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!