
எதிர்கட்சிகளுக்கு 100க்கு அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கும்.
இதனை கருத்திற்கொண்டே அரசாங்க கட்சி, எதிர்கட்சியினால் முன்மொழியப்பட்ட வேட்பாளரை ஆதரிப்பதாக கூறியது என்று சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் நேற்றைய வாக்கெடுப்பின்போது, எதிர்கட்சிகளுக்கு மத்தியில் தொடர்பாடல் பிரச்சினை இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்கட்சியினால் முன்மொழியப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு அரசாங்கம் ஆதரவளித்ததன் பின்னரே, ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் ஒரு வேட்பாளரை அறிவித்தது.
எனினும் இறுதியில் நாட்டு மக்கள் மத்தியில், சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துடன் இணைந்து சியம்பலாப்பிட்டியவை பிரதி சபாநாயகராக தெரிவுசெய்துள்ளதாகவே செய்தி சென்றுள்ளதாக சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!