அரசாங்கத்திற்கு எதிராக திரும்பும் ஆளும் கட்சி உறுப்பினர்கள்! – சஜித் பிரேமதாசவிற்கு சென்ற கடிதம்

தாம் முன்வைத்துள்ள இரண்டு நிபந்தனைகளில் ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்றுக்கொள்ளாவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அரசாங்கத்தின் 10 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு இது குறித்து எழுத்து மூலம் அறிவித்துள்ளனர். சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னர் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 10 பின்வரிசை உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெற்றதன் பின்னர், அனைத்துக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எந்தவொரு இணக்கப்பாடும் இன்றி கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவளிக்காது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்லது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் அரசாங்கத்தை அமைத்து நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும். தற்போது இந்த 10 உறுப்பினர்கள் உட்பட ஆளும் கட்சியில் 117 உறுப்பினர்கள் உள்ளதோடு எதிர்க்கட்சியில் 107 உறுப்பினர்கள் அமர்ந்துள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி பெறுவதற்கு நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை தேவை, மேலும் இந்த அரசாங்கத்தில் உள்ள பத்து பின்வரிசை உறுப்பினர்களின் ஆதரவுடன் எதிர்க்கட்சி 117 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.

இதேவேளை, 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் அங்கம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர ஜனாதிபதியிடம் தனது இராஜினாமா கடிதத்தை கைளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!