சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை?

சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

மரணதண்டனை அமுல் படுத்தப்படப் வேண்டுமென அரசாங்கம் தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமெனக் கூறி இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் இவ்வேளையில் சிறுவர் துஷ்பிரயோகம், மற்றும் சிறுவர் கொலை ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகின்றது. இதனை முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகின்றது. ஆண்கள் வர்த்தகத்திலீடுபடுகின்றனர், பெண்கள் போதைப்பொருள் கடத்தலிலீடுபடுகின்றனர். சில தாய்மார்களும் ஈடுபடுவது கவலைக்குரிய விடயமாகும். இதனால் நாட்டில் மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. இது குறித்து ஜனாதிபதி தீர்க்கமான முடிவு எடுப்பார். போதைப்பொருள் விற்பனையை இல்லாதொழிக்க அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது.இதனால் மரண தண்டனை குறித்து சிந்திக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!