போர் களமாக மாறிய காலி முகத்திடல் – 9 பேர் வைத்தியசாலையில்

அரசாங்கத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்த கூடாரங்களை உடைத்துள்ளனர்.
குறித்த ஆர்பாட்டக்காரர்கள் மீது நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பதற்றத்ததை வழமைக்கு கொண்டு வருவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து கூடாரங்களையும் அரசாங்கத்திற்கு ஆதராவான ஆர்ப்பாட்டக்காரர்கள் தீக்கிரையாக்கியுள்ளனர்.

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் இந்த பதற்ற நிலையினை தொடர்நது 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!