கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்! சபாநாயகர் எடுத்துள்ள முடிவு

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்க சபாநாயகர் இணங்கியுள்ளார்.  

இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 
இதன்போது கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  


மேலும், 6ஆம் திகதி கொண்டு வரப்பட்ட அவசரகால விதிகளும் 10 நாள் அவகாசத்துக்குள் சபை விவாதத்திற்கு சமர்பிக்க வலியுறுத்தப்பட்டது.

விவாதம் நடைபெறும் திகதி  புதன்கிழமை தீர்மானிக்கப்படும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!