ஊரடங்கிலும் தொடரும் போராட்டங்கள்

அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்கள் மீது அரசாங்க ஆதரவாளர்களினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிராக நாடளாவிய ரீதியின் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வன்முறையை கண்டித்தும், அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுமக்கள், இளைஞர்கள், தொழிற்சங்கங்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன.

அத்துடன், தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக காலிமுகத்திடல் கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களத்தை அடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொழும்பின் பிரதான நகரங்களில்  சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!