இரத்மலானை விமான நிலையமும் சுற்றிவளைப்பு – தப்பிச் செல்வதை தடுக்க முயற்சி!

இரத்மலானை விமான நிலைய வளாகத்தை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்துள்ளனர். விடிய விடிய அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்கள் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தி, ஆளும்கட்சியினர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனரா என கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    
நைஜீரியாவில் இருந்து விமானமொன்று இன்று அதிகாலை தரையிறங்க இருந்த நிலையிலேயே விமான நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தமது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடக் கூடும் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக தலைநகர் கொழும்பில் எந்த நிமிடத்திலும் புறப்படுவதற்கு தயார் நிலையில் 5 விமானங்கள் தயாராக உள்ளன. இந்த விமானங்களை இயக்க 8 விமானிகளும் தயாராக உள்ளனர் எனவும் அதில தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல்வேறு சுங்கச் சாவடிகளில் அரச எதிர்ப்பாளர்கள் வாகனங்களை மறித்து ஆளும்கட்சியினர் தப்பிச் செல்கிறார்களா என சோதனையிட்டு வருகின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!