அமெரிக்கா- கனடா எல்லையில் உறையவைக்கும் குளிரில் சிக்கி தவித்த இந்தியர்கள்!

அமெரிக்கா- கனடா எல்லையில், உறையவைக்கும் குளிரில், மூழ்கும் நிலையில் படகு ஒன்றில் இருந்து 6 இந்தியர்களை மீட்டுள்ளதாக அமெரிக்க தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த சம்பவமானது ஏப்ரல் 28ம் திகதி நடந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கனடிய பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் தெரிவித்த தகவலின் அடிப்படையில் செயின்ட் ரெஜிஸ் மொஹாக் பூர்வக்குடி காவல் துறை சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளது.
    
இந்த நிலையில், ஆபத்தான கட்டத்தில், உறையவைக்கும் குளிரில், மொத்தமாக மூழ்கும் நிலையில் இருந்த படகில் இருந்து 7 பேர்களை மீட்டுள்ளனர்.

மேலும், கடுமையான குளிரால் பாதிக்கப்பட்டிருந்த அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் இந்தியர்கள் எனவும், 19 முதல் 21 வயதுடையவர்கள் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் 6 பேர் எனவும், எஞ்சிய ஒருவர் அமெரிக்க நாட்டவர் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைதான இந்தியர்கள் ஆறு பேரும் கனடாவுக்கு சென்று, அங்கிருந்து அமெரிக்கா எல்லையை கடக்க முயன்றதாக கனேடிய அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

கனடாவின் மனிடோபா மாகாணத்தில் இந்திய மாநிலம் குஜராத்தைச் சேர்ந்த நான்கு குடும்ப உறுப்பினர்கள் கடுமையான குளிரால் சடலமாக மீட்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!