58 கைதிகள் காணாமல் போயுள்ளனர்

புனர்வாழ்வு வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டிட நிர்மாணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 58 கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த கைதிகள் வட்டரெக்க சிறைச்சாலைக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
சிறைச்சாலை பேருந்தின் மீது போராட்டகார்கள் நேற்று தாக்குதல் நடத்திய நிலையில், இந்த காணாமல் போன சம்பவம் நடந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் எச்.எம்.டி.என். உபுல்தெனிய கூறியுள்ளார்.

அதேவேளை கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக அழைத்து வரப்பட்டதாக கூறப்படும் கைதிகள் சிலரை இளைஞர் பிடித்து தாக்குதல் நடத்தியினர்.

வட்டரெக்க சிறைச்சாலையில் இரண்டு ஆண்டு புனர்வாழ்வு பயிற்சியை பெற்று வருவதாகவும் கட்டிட நிர்மாணப் பணியிடங்களில் வேலைக்காக தாம் அழைத்து வரப்படுவதாகவும் கைதிகள் கூறியுள்ளனர்.

அத்துடன் நேற்றைய தினம்  சிறைச்சாலை அத்தியட்சகர் ரத்நாயக்க தம்மை அழைத்து வந்ததாக கைதிகள் தெரிவித்தனர். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!