மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு IGP மற்றும் இராணுவ தளபதிக்கு அழைப்பு

மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 12 ஆம் திகதி குறித்த இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்து சட்டத்தை ஏன் நடைமுறைபடுத்தவில்லை என கேட்டறியும் வகையில் குறித்த இருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருக்கு மனித உரிமை ஆணைக்குழுவினால் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!