மகிந்த இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை!- இந்திய தூதரகம் அறிவிப்பு.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் இந்தியாவுக்கு தப்பி சென்றதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
    
பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே நேற்று முன் தினம் ராஜினாமா செய்த பின் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார். அவர் குடும்பத்துடன் இந்தியா தப்பி சென்றுவிட்டதாக சமூகவலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது.

‘இது முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது. இதை நம்ப வேண்டாம்’ என, இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!