‘ஹிட்லரை விட புதின் ஆபத்தானவர்’ – போலந்து பிரதமர் விளாசல்!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் புதின் பற்றி போலந்து பிரதமர் மேட்யூஸ் மொராவீக்கி ‘தி டெலகிராப்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.
   
அதில் அவர், “புதின், ஹிட்லரும் அல்ல, ஸ்டாலினும் அல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மிகவும் ஆபத்தானவர். உக்ரைனில் புச்சா, இர்பின், மரியுபோல் நகரங்களின் தெருக்கள் அப்பாவி மக்களின் ரத்தத்தால் ஓடின.

இது ஸ்டாலின் மற்றும் ஹிட்லரின் சபிக்கப்பட்ட சித்தாந்தங்கள் திரும்புவதைக் குறிக்கிறது. 20-ம் நூற்றாண்டின் கம்யூனிசத்தையும், நாஜிசத்தையும் ேபான்று புதின் உருவாக்க மேற்கத்திய நாடுகள் அனுமதித்து விட்டன. கீவில் ரஷியா தாக்குதலை நிறுத்தாது என்பதால் நாம் நமது ஆன்மாவை, சுதந்திரத்தை, இறையாண்மையை இழப்போம்” என கூறி உள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!