போராட்ட களத்தில் கைதிகள் நுழைந்தது எப்படி..! சிறைத்துறை விசாரணை

கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்குவதற்கு வடரேகா திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் உள்ள கைதிகள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை சிறைச்சாலைகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் திங்கட்கிழமை (9) நடைபெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய குழுவில் இருந்தவர்கள் அணிந்திருந்த காற்சட்டைகள், தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆண்கள் அணிந்திருந்த காற்சட்டைகள் ஒரே மாதிரியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கைதிகள் எனப்படுவோர் சிறைச்சாலைகள் சீருடையை அணிந்திருக்கவில்லை என்றும், அவர்களது சேவைகளைப் பயன்படுத்திய நிறுவனங்களால் வழங்கப்பட்ட சீருடையை அணிந்திருந்ததாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளுக்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் மற்றுமொரு அதிகாரி இனறு வியாழக்கிழமை (12) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!