பிரான்சில் 36 வருடங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்த இளம் பெண் கொலை வழக்கு!

பிரான்சில் 36 ஆண்டுகளுக்கு முன் நடந்த இளம் பெண் கொலை மீதான வழக்கு நேற்று முடிவுக்கு வந்துள்ளது. பிரான்சில் 1980-களில் ஒரு சிறிய ஆல்பைன் நகரத்தில் காணாமல் போன ஒரு இளம் பெண்ணைக் கொலை செய்ததாக ஒரு ஆண் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கு, 36 ஆண்டுகள் கழித்து வியாழனன்று முடித்துவைக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
    
மேரி-தெரேஸ் போன்ஃபான்டி (Marie-Therese Bonfanti) எனும் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான 25 வயதான பெண், Grenoble-ன் வடகிழக்கில் உள்ள Pontcharra-ல் செய்தித்தாள்களை விநியோகிக்கும் போது காணாமல் போனார், மேலும் அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

மேரி-தெரேஸ் போன்ஃபான்டி காணாமல் போன முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு, திங்கட்கிழமை, மே 9, 2022 அன்று 56 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கடத்தல், வலுக்கட்டாயமாக சிறைப்படுத்தல் மற்றும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

அதனைட் தொடந்து, விசாரணையில் அந்த நபர் மேரியை கொலை செய்ததாக பொலிஸ் காவலில் இருந்தபோது ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். அவரது வன்முறை குணம் காரணமாக காணாமல் போன நேரத்தில் அவர் சந்தேக நபராக கருதப்பட்டார் ஆனால் கைது செய்யப்படவில்லை.
இந்த கொலை, பாலியல் தூண்டுதலால் செய்யப்பட்ட கொலை இல்லை என்றும், மாறாக எதோ ஒரு தகராறு காரணமாக கொலை நடந்ததாக வழக்கறிஞர்கள் நம்புகின்றனர்.

மேரி-தெரேஸ் போன்ஃபான்டியின் குடும்பத்தினர் மற்றும் அவரது கணவர் பிரச்சாரம் செய்ததன் காரணமாக 2020-ல் வழக்கு மீண்டும் திறக்கப்பட்டது. ஜூன் 2021 முதல், காணாமல் போன இடத்தைச் சுற்றி ஆராய்ச்சி மீண்டும் தொடங்கியது.

இந்த வழக்கு வியாழன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் வழக்கு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!