ரணில் அமைச்சரவை இன்று கூடுகிறது- புதிய அமைச்சர்களும் நியமிக்கப்படுவர்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நான்கு பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டிருந்தனர்.அமைச்சரவை முழுமையாக நியமிக்கப்படும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய நடவடிக்கைகளை சட்ட ரீதியாகவும் வலுவாகவும் முன்னெடுத்துச்செல்வதற்காக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏனைய அமைச்சர்கள் இன்று நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றிரவு முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!