கொள்கை ரீதியான அரசியலை கடைபிடிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி! சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் எந்த உறுப்பினரும் பணத்திற்கு விலை போக மாட்டார்கள் என அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் அரசியல் ஆதாயத்துக்கான அரசியல் ஏலத்திற்கு பதிலாக கொள்கை ரீதியான அரசியலையே கடைப்பிடித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!