
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்த இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, நாட்டின் நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் குறித்தும், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
அதன்போதே இந்த விடயங்களை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமாகவுள்ளது. ஓர் உறுதியான அரசாங்கம் அமையப் பெற வேண்டும். அப்போதுதான் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியும். ஓர் உறுதியான அரசாங்கம் அமையப்பெற வேண்டும் என்பதில் கரிசனை செலுத்தினோம்.அதேவேளை, பிரதமராக ரணில் அல்ல வேறு யார் வந்தாலும் நாம் தொடர்ந்து பணியாற்றியிருப்போம்“ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!