ரணிலிற்கும், மைத்திரிக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.
சர்வகட்சி அரசாங்கமொன்றை நிறுவுதல் மற்றும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளல் என்பன குறித்து இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது. 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் நேற்றைய தினம் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு எவ்வாறு ஆதரவு வழங்கும் என்பது குறித்து இன்றைய தினம் பிரதமருக்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!