பணிந்தார் பிரதமர் ரணில்!

ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தெரிவித்துள்ளார்.
    
ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை விவாதிப்பதற்கான எதிர்க்கட்சிகளின் முயற்சி அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் நேற்று முடக்கப்பட்டதை அடுத்து பிரதமர் இந்த விளக்கத்தை வெளியிட்டார்.

பிரேரணையை விவாதிப்பதை தோற்கடிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கத்துடன் வாக்களித்தார். இது தொடர்பில் பிரதமர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,
இது ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு அல்ல. இது அனைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கும், அதிருப்தி பிரேரணையை உடனடியாக விவாதிப்பதற்குமான வாக்கெடுப்பாகும்.

தமது வீடுகள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விவாதம் நடத்த விரும்பும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என சுமந்திரன் எம்.பியிடம் 16 ஆம் திகதி அறிவுரை கூறினேன்.

தாக்குதல்கள் மீதான விவாதத்தை இன்றே நடத்த அனுமதிருந்தால் நன்றாக இருந்திருக்கும், இன்னும் சில நாட்களில் இந்த அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அடையாள அதிருப்தி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இப்போது ஜனாதிபதியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பின் தோல்வியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, அதிருப்தி பிரேரணையை பிந்தைய திகதியில் எடுத்துக்கொள்வதை தடுக்கிறார்கள்.

எதிர்கட்சிகள் சிறந்த வியூக அணுகுமுறையை முன்னோக்கிப் பயன்படுத்தினால் நல்லது. இருந்தபோதிலும், கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கான எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!