பின்னணி பாடகியாக மாறிய பட தயாரிப்பாளர்!

அஜித்தின் வேதாளம், என்னை அறிந்தால், விஜய் சேதுபதியின் கருப்பன் உட்பட பல படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்தினத்தின் மருமகள் ஐஸ்வர்யா. இவர் தெலுங்கிலும் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் கூத்தன் படம் மூலம் பின்னணி பாடகராக உருவெடுத்துள்ளார். இவர் சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தெலுங்கில் உருவாகி வரும் ‘ஆக்சிஜன்’ என்ற படத்திற்காகவும் இரண்டு பாடல்களை பாடியுள்ளார்.

கூத்தன்’ படத்தில் பாலாஜி இசையில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம் பெறுகிறது. இதில் ஒரு பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளர். ‘கூத்தன்’ ஏ.எல்.வெங்கி இயக்கத்தில் அறிமுக நடிகர் ராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் படமாகும்

Tags: