கடனை செலுத்த பிரதமரிடம் உள்ள திட்டங்கள் என்னவென்று ஹர்ஷ டி சில்வா கேள்வி

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது 5.5 பில்லியன் டொலர்கள் அடுத்த 12 மாதங்களில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியதுடன், பிரதமரிடம் உள்ள திட்டங்கள் என்னவென்றும் கேள்வியெழுப்பினார்.

இந்நிலையில், குழுக்கள் ஊடாக தனது பூரண ஆதரவை வழங்குவதாகவும், அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பிரதமரிடம் உறுதியளித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!