மிரட்டலான கூகுள் க்ளிப்ஸ் கேமரா அறிமுகம்.!

கூகுள் நிறுவனம் கடந்த புதன்கிழமை பல்வேறு புதிய கேஜெட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இந்த பொருட்கள் அனைத்தும் சிறந்த தொழில்நுட்பங்களை கொண்டுள்ளதாக உள்ளது. கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல், பிக்சல்புக் லேப்டாப், ஹெட்செட், ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் போன்ற வரிசையில் கூகுள் நிறுவனம் கூகுள் க்ளிப்ஸ் கேமராவை அறிமுகப்படுத்தியது.

இந்த கேமரா பொறுத்தவரை பல தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் கூகுள் க்ளிப்ஸ் கேமரா எந்த நபரின் தலையீடும் இல்லாமல் தானாகவே புகைப்படங்களை எடுக்கும் திறமை கொண்டவையாக உள்ளது.

கூகுள் க்ளிப்ஸ் : கூகுள் க்ளிப்ஸ் கேமரா பொறுத்தவரை செயல்திறன்கள் மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு எந்த நபரின் தலையீடும் இல்லாமல் தானாகவே புகைப்படங்களை எடுக்கும் சிறப்பு செயல்திறனைக் கொண்டுள்ளது இந்த கூகுள் க்ளிப்ஸ் கேமரா.

செயற்கை நுண்ணறிவு: இக்கருவியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (Artificial Intelligence – AI) இடம்பெற்றுள்ளது, இதனால் மனிதர்கள், விலங்குகள் போன்ற அனைத்து முகங்களை அடையாளம் காண முடியும்

12எம்பி சென்சார்: கூகுள் க்ளிப்ஸ் கேமராவில் 12எம்பி சென்சார் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 8ஜிபி மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்கேமரா. மேலும் சிறந்த தனித்திறமை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கூகுள் க்ளிப்ஸ் கேமரா.

130 டிகிரி : இந்த கேமரா பொதுவாக 130 டிகிரி கோணத்தில் உள்ள நபர்களையும் பிராணிகளையும் அட்டகாசமாக புகைப்படம் எடுக்கும்திறமை கொண்டுள்ளது.

விலை: இந்த கருவியின் விலை மதிப்பு 249 அமெரிக்க டாலர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,