ஓலாவில் பயணம் செய்யும் போது பிறந்த குழந்தை: – 5 வருடங்களுக்கு இலவச பயணம்

புனேவில் கர்ப்பிணி ஒருவர் ஓலா கேப்பில் பயணம் செய்யும் போது குழந்தை பிறந்ததால் அந்த குழந்தைக்கு சலுகை ஒன்றை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.21 வயது கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அக்டோபர் 24 ஆம் திகதி குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் திகதி கொடுத்திருந்தனர். ஆனால் அப்பெண்ணுக்கு அக்டோபர் 2 ஆம் திகதியே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஓலா கேப்பில் புக் செய்து தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் கணவர்.

ஆனால் காரில் பயணித்த 4 கிலோ மீற்றர் தொலைவிலேயே அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அதே காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஓலா கேப்பில் குழந்தை பிறந்ததால் 5 வருடங்களுக்கு அந்த குழந்தை ஓலா கேப்பில் இலவசமாக பயணிக்கலாம் என்ற சலுகையை நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags: