கனடாவில் 5 குழந்தைகளின் தாயை சுட்டுக்கொன்ற இளைஞன்!

கனடாவில் 5 குழந்தைகளின் தாய் உயிரிழந்த சம்பவத்தில் 29 வயது இளைஞனை பொலிசார் தேடி வருகின்றனர். கேல்கிரியை சேர்ந்தவர் தலால் அமீர் (29). ரவுடியான தலால் கடந்த வாரம் காரில் பரபரப்பான பகுதிக்கு சென்ற நிலையில் அங்கு வேறு ஒரு காரில் வந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

இந்த சம்பவத்தில் அந்த இடத்தில் இருந்த அப்பாவி பெண்ணான ஏஞ்சலா மெக்கன்சி (40) என்பவர் கொல்லப்பட்டார். ஏஞ்சலா 5 குழந்தைகளுக்கு தாய் ஆவார்.
    
இதையடுத்து இவ்வழக்கில் தலாலை பொலிசார் தேடி வருகின்றனர். கொலை முயற்சி, பொறுப்பற்ற முறையில் துப்பாக்கியை கையாண்டது, தடைசெய்யப்பட்ட துப்பாக்கியை வைத்திருப்பது, தடைசெய்யப்பட்ட சாதனம் வைத்திருப்பது போன்ற வழக்குகளின் அடிப்படையில் அவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் குறித்த காரை தலால் திருடி கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. 5 அடி 11 அங்குலம் உயரம் கொண்ட தலால் தலைமுடி மற்றும் கண்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!