சிங்கம் போல் வரவேண்டிய மகிந்த பூனை போல் இரகசியமாக வந்து சென்றார் – சந்திம வீரகொடி

முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சிங்கம் போன்று நாடாளுமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

எனினும், இன்று பூனை போன்று இரகசியமாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்து எலியை போன்று வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு மதிக்கும் தலைவரான மகிந்த ராஜபக்சவை ‘வீட்டுக்கு போ’ என்று கூறும் நிலைக்கு நாட்டு மக்கள் வந்துள்ளதாக சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.    

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!