இலங்கை பொருளாதார நிலை! மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்டுள்ள புதிய தகவல்

இலங்கையின் கடன்களை மீள்திருத்தம் செய்து கொள்வதற்காக நிதி மற்றும் சட்ட ஆலோசகர் நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இதன்படி லசாட் (Lazard)மற்றும் கிளிப்போட் (Clifford)ஆகிய நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை அறிவித்துள்ளது.

இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் மீள்திருத்த பேச்சுவார்த்தைகள், 6 முதல் 7 மாதங்களுக்குள் நிறைவுசெய்யப்படுமானால், அடுத்த 12 மாதங்களுக்குள் இலங்கையின் பொருளாதாரம் அடுத்த 12 மாதங்களுக்குள் ஸ்திரமாகும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!