‘2.0’ படத்தில் வித்தியாசமான உடையில் தோன்றும் எமிஜாக்சன்

ரஜினி நடிப்பில் உருவாகும் ‘2.0’ படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இயக்குனர் ‌ஷங்கரின் ஆலோசனைப்படி இந்த பாடல் காட்சியில் எமிஜாக்சன் அணிவதற்கான உடைகளை தயாரித்துள்ளனர். இவற்றை அணிந்து பார்ப்பதற்காக எமிஜாக்சன் சென்னை வந்தார். தனக்காக வித்தியாசமாக, விதம் விதமாக தைக்கப்பட்டிருந்த ஆடைகளை அணிந்த எமி, மெய் மறந்து போய்விட்டார்.

“ஆடைகளின் வடிவமைப்பும், அழகும் அற்புதம். அவற்றை அணிந்ததும் நான் மெய் மறந்து போய் விட்டேன்.

‌ஷங்கரின் யோசனையும், எண்ணமும் அருமை” என்று எமிஜாக்சன் பாராட்டியுள்ளார்.

வழக்கமாகவே ‌ஷங்கர் படங்களில் பாடல் காட்சிகளை அசத்தலாக அமைப்பார். ஆடுபவர்களின் உடைகளிலும் மிகுந்த கவனம் செலுத்துவார். ‘2.0’ படத்தில் பாடல் காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Tags: