புகைப்பட கலைஞர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய போட்டோஷாப் அம்சங்கள்

புகைப்படம் எடுத்தல் மற்றும் அவற்றை எடிட் செய்வதும் கிட்டத்தட்ட ஒரே பணி தான் எனலாம். புகைப்படங்களை எடுக்க பயின்று வருவோர் அடிப்படையான எடிட்டிங் கற்றுக் கொள்வது சிறப்பான ஒன்றாகும். சிலருக்கு எடிட்டிங் செய்வது பிடிக்காது என்றாலும், சிலர் எடிட் செய்வதை விரும்புவர். அந்த வகையில் புதிதாய் புகைப்படம் எடுக்க பயில்வோர் எனில் எடிட்டிங் பயில்வது சிறப்பானது.

அவ்வாறு எடிட்டிங் செய்ய பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கின்றன, இவற்றை கொண்டு புகைப்படங்களை எடிட் செய்து மேலும் அழகூட்ட முடியும். அந்த வகையில் புகைப்படத்தை மேம்படுத்த நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்

பிரைட்னஸ் மற்றும் கான்ட்ராஸ்ட் முதலில் இவ்வாறான அம்சங்களை சரி செய்வது அவசியமானதாக இருக்கிறது. அதனை லைட்ரூம் மென்பொருள் கொண்டு சரி செய்வது சிறப்பானதாக இருக்கும் என்றாலும் போட்டோஷாப் கொண்டும் எக்ஸ்போஷர் சரி செய்யலாம்.

கர்வ்ஸ் மற்றும் லெவல்ஸ் பிரைட்னஸ் மற்றும் கான்ட்ராஸ்ட் ஒட்டுமொத்த புகைப்படத்திலும் பிரதிபலிக்கும் நிலையில், கர்வ்ஸ் மற்றும் லெவல் நீங்கள் விருப்பப்படும் இடங்களில் மட்டும் டியூன் செய்ய வழி செய்கிறது. இந்த ஆப்ஷன் எக்சாக்ட் பிளாக், வைட் மற்றும் கிரே பாயின்ட்களை தேர்வு செய்து அவற்றை டியூன் செய்யலாம்.

சாட்யூரேஷன் புகைப்படத்தின் சாட்யூரேஷன் மாற்றியமைக்கும் போது கவனமாக இருப்பது அவசியமாகும். கொஞ்ச பிழை ஏற்பட்டாலும் புகைப்படம் செயற்கை தோற்றம் பெற்று விடும். இந்த டூல் கொண்டு ஸ்கின் டோன்களை அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.

கலர் லுக்கப் டேபிள் இந்த டேபிள் கொண்டு அனைத்து அட்ஜெஸ்ட்லேயர்களையும் ஒரே இடத்தில் வைத்துக் கொள்ள முடியும். இதனால் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க முடியும்.

ஹிஸ்டோகிராம் ஹி்ஸ்டோகிராம் என்பது புகைப்படத்தின் டோனல் ரேன்ஜ் காண்பிக்கும் கிராஃப் ஆகும். இதில் உள்ள X-ஆக்சிஸ் புகைப்படத்தின் பிரைட்னஸ் அளவையும், Y-ஆக்சிஸ் ஒவ்வொரு டோனின் பிக்சல்களை குறிக்கும். ஹிஸ்டோகிராம் கொண்டு புகைப்படத்தின் எக்ஸ்போஷரை மாற்றியமைக்க முடியும்.

குளோனிங் மற்றும் ஹீலிங் புகைப்படங்களில் உள்ள தேவையற்ற அம்சங்களை நீக்க அவசியமான அம்சங்களாக குளோன் ஸ்டாம்ப் மற்றும் ஹீலிங் பிரஷ் டூல்கள் இருக்கின்றன.

லேயர்கள் புகைப்படத்தில் ஒவ்வொரு லேயர்களும் பல்வேறு அம்சங்கள் நிறைந்திருக்கும். லேயர்களின் ஒபாசிட்டி மற்றும் பிளென்டிங் மோட் போன்றவற்றை மாற்றியமைத்து புகைப்படங்களில் ஒவ்வொரும அம்சத்திலும் மாற்றங்களை மேற்கொள்ள முடியும்.

Tags: ,