தலையாட்டி பொம்மை அரசாங்கம்! நீர்த்துப்போக செய்யப்படும் 21! சஜித் கண்டனம்

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தின் நீர்த்துப்போன வரைவை முன்வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு மற்றும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை அதன் முழு அதிகாரத்துடன் மீண்டும் அமுல்படுத்தும் வரைவு திருத்தத்தை தமது கட்சி முன்வைத்துள்ளது.

எனினும் தற்போதைய தலையாட்டி பொம்மை அரசாங்கம், அந்த சீர்திருத்தங்களை நீர்த்துப்போகச் செய்து பொதுமக்களை ஏமாற்றும் அரசியல் சதிகளில் ஈடுபடுவதாக பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்

சட்டத்தரணிகள் சம்மேளனமும் அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை கண்டித்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இனிமேலும் பொதுமக்களை ஏமாற்றவேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தை தனியார் மயம் அல்லது குடும்ப மயப்படுத்தவேண்டாம் என்றும் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!