சவூதி சொகுசு கார் கண்காட்சியில்முதல் முறையாக பங்கேற்ற பெண்கள்!

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட சொகுசு கார் கண்காட்சியில் முதல் முறையாக பெண்கள் கலந்துகொண்டுண்டனர். ரியாத்தில் சொகுசு கார் கண்காட்சியுடன் கார் விற்பனையும் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கலந்துகொண்ட ஏராளமான பெண்கள், புதிய மாடல் கார்களின் விபரங்களை ஆர்வத்துடன் கேட்டு தெரிந்துகொண்டனர்.சிலர் காரில் அமர்ந்து டெஸ்ட் ட்ரைவும் செய்தனர்.

கடத்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்குப் பிறகு அந்நாட்டில், பெண்கள் கார் ஓட்டுவதற்கான அனுமதியை தற்போது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: ,