காதலியின் வலிக்கு தனது ஷூ மூலம் நிவாரணம் அளித்து இன்டர்நெட்டில் வைரலான காதலன்!

இப்போதெல்லாம் சேலை கட்டும் பெண்கள் கூட ஹீல்ஸ் அணிகிறார்கள். இந்த “இவர்கள் கூட” என கூறிவிட்டால் ஏன் நாங்க ஹீல்ஸ் போடக் கூடாதா என… பெண்ணியவாதிகள் சண்டைக்கு வந்துவிடுவார்கள். ஹீல்ஸ் அதிகம் பயன்படுத்தினால் கால் வலி எடுக்கும் என தெரியும். ஆனால், அது எந்த அளவிற்கு இருக்கும் என்பது ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு மட்டுமே தெரியும். ஹீல்ஸ் அணிவது தவறல்ல, ஆனால் அதன் மூலம் ஏற்படும் பக்கவிளைவுகளையும் அறிந்துக் கொள்ள வேண்டும். இதோ! இங்கு ஒரு காதலன் ஹீல்ஸ் காரணத்தால் ஏற்பட்ட காதலியின் வலிக்கு தனது ஷூ மூலம் நிவாரணம் அளித்து ஒரேநாளில் உலகமகா வைரலாகி இருக்கிறார்.

ஷாபின்பா மாவட்டம்!
தெற்கு சீனாவில் இருக்கும் ஷாபின்பா மாவட்டம். இங்கே அமைத்திருக்கும் க்ஸின்கியோ எனும் மருத்துவமனையில் நடந்த சம்பவத்தின் மூலமாக தான் இந்த காதல் ஜோடி இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஐந்தாம் மாடி!
க்ஸின்கியோ மருத்துவமனையின் ஐந்தாம் மாடியில் அவுட் பேஷண்டாக வந்திருந்தது ஒரு ஜோடி. காத்திருந்த நேரத்தில் ஹீல்ஸ் அணிந்திருந்த அந்த காதலிக்கு கால் வலி எடுத்தது. உடனே, அப்பெண்ணின் காதலர் தனது ஷூவை கழற்றி கொடுத்து, அந்த பெண்ணின் ஹீல்ஸ்-ஐ அவர் அணிந்துக் கொண்டார்.

வேடிக்கை!
இந்த செயலை கண்டு சிலர் வியந்தனர். சிலர் வேடிக்கையாக எடுத்துக் கொண்டார். அந்த மருத்துவமனையில் இருந்த கேமராவில் இந்த நிகழ்வு பதிவாகியிருந்தது. மேலும், அங்கே இருந்த க்ஸீ எனும் பெண் புகைப்படம் எடுத்து சீன சமூக தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

யோசிக்காமல்!
வீட்டில் பெண்களின் ஹீல்ஸ் செருப்பு அணிந்து பார்க்கவே ஆண்களுக்கு கூச்சம் இருக்கும். ஆனால், பொது இடத்தில் காதலிக்கு வலி என்ற ஒரே காரணத்தால், யார் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என எதற்கும் தயங்காமல் அந்த காதலன் செய்த இந்த செயலை கண்டு பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Tags: ,