புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி பெற்றவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்ட கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
    
மேலும் கட்சியின் செயற்குழு கூடி இது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!