ரூ.12,999/-விலையில் லாவா அறிமுகப்படுத்தும் புதிய நோட்புக்.!

சமீபத்தில் லாவா நிறுவனம் இசெ60, இசெட்70, இசெட்80 மற்றும் இசெட்90 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியது, அதைத் தொடர்ந்து இப்போது புதிய லாவா நோட்புக் மாடலை அறிமுகப்படுத்துகிறுது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள லாவா ஹீலியம் 12 நோட்புக் விலைப் பொறுத்தவரை ரூ.12,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்க்கு முன்பு லாவா ஹீலியம் 14 நோட்புக் வெளிவந்தது.

ஹீலியம் 12 நோட்புக்:
ஹீலியம் 12 நோட்புக் பொதுவாக 12.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின் (1366-768)பிக்சல் தீர்மானம் இவற்றுள்ளது இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:
இக்கருவி 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக 128ஜிபி மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஹீலியம் நோட்புக் மாடல்.

நிறங்கள்:
தங்கம் மற்றும் வெள்ளி நிறங்களில் இந்த ஹீலியம் 12 நோட்புக் வெளிவந்துள்ளது, மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் போன்றவசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த நோட்புக் சாதனம். அதன்பின் விஜிஏ கேமரா ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
ப்ளூடூத் 4.0, இரண்டு யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
10000எம்ஏஎச் பேட்டரி ஆதரவைன் கொண்டுள்ளது இந்த ஹீலியம் 12 நோட்புக் சாதனம்.

Tags: